கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தம்


 தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. நகைக்கடனை நிறுத்துமாறு கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அனைத்து மாவட்ட மற்றும் மண்டல இணை பதிவாளர்களுக்கு செல்போன் மூலம் நேற்று ஒரு குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்பியுள்ளார்.


அதில் அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் வழங்குவதை உடனடியாக நிறுத்தி வைக்கும்படி அவர் ஆணை பிறப்பித்துள்ளார்.தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்வதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.