கொரோனா ஊரடங்கால்-மாணவியர், சுயதொழில்


கொரோனா ஊரடங்கால், வீட்டில் இருந்த கல்லுாரி மாணவியர், சுயதொழில் கற்று, வருமானம் ஈட்டி வருகின்றனர்.

கொரோனா பரவலை தடுக்க, மார்ச், 24 முதல், நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் பள்ளி, கல்லுாரிகள் திறக்காததால், மாணவ - மாணவியர், நான்கு மாதங்களாக, வீட்டில் முடங்கியுள்ளனர். பல மாணவியர், வீட்டில் வெட்டியாக இல்லாமல், சுயதொழில் கற்று, சம்பாதிக்க துவங்கி உள்ளனர்.

'யூ டியூப்' சமூக வலைதளத்தை பார்த்து, ஓரிரு நாளில் கூடை பின்ன கற்றுக்கொண்டு  பல்வேறு வித கூடைகளை தயாரித்து இதன் மூலம், ஓரளவு வருமானம் பெறுகிறார். 


இதுபோல, கல்லுாரி மாணவியர் பலரும், தையல், பியூட்டிஷியன், சமையல்   என, பல்வேறு சுயதொழில்களை, கற்று வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம், மோகனுாரில், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இங்கு, மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, சானிடைசர் உற்பத்தி செய்யும் பணியை, ஆலை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.


ஆலையின் மேலாண் இயக்குனர் விஜய்பாபு கூறியதாவது:சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பெயரை சுருக்கி, 'சாகோஸ்' என்ற பெயரில், 100 சதவீதம் தரமான, சானிடைசர் திரவம் உற்பத்தி செய்யப்படுகிறது. தினமும், 10 ஆயிரம் லிட்டர் தயார் செய்யப்படுகிறது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் அலுவலகங்களின் பயன்பாட்டுக்காக, மாதம்தோறும், 600 லிட்டர் சப்ளை செய்ய உத்தரவு பெறப்பட்டுள்ளது.