ஏவுகணை நாயகன் நினைவு தினம் இன்று

மக்கள் மனதில் நீக்கமற நிறைந்த அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று  (A. P. J. Abdul Kalam, அக்டோபர் 15, 1931 - சூலை 27, 2015)உலக மக்களின் இதயங்களில் நீக்கமற நிறைந்து இருப்பவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். அப்படிப்பட்ட மகத்தான மாமனிதரின் எண்ண வடிவில் எழுந்த கனவுகள்.


ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, அக்டோபர் 15, 1931 - சூலை 27, 2015) பொதுவாக டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் இந்தியாவின், 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார்.


இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார். 


1970களில், கலாம் வெற்றிகரமான எஸ்.எல்.வி திட்டத்தின் தொழில்நுட்பத்திலிருந்து எறிகணைத் உற்பத்திக்காக டெவில் செயல் திட்டம் (Project Devil) மற்றும் வாலியன்ட் செயல் திட்டம் (Project Valiant) என்ற இரு திட்டங்களை இயக்கினார். மத்திய அமைச்சரவை மறுத்தபோதிலும் தலைவர் இந்திரா காந்தி தனது தன்னாற்றல் மூலம் கலாமின் கீழ் இயக்க உள்ள விண்வெளி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கினார். 


கலாம் இந்திய இராணுவத்துக்காக ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்து பணித்துறையை தொடங்கினார். 


1998 இல் கலாம் இதயம் சார்ந்த மருத்துவரான மருத்துவர் சோம ராஜுவுடன் சேர்ந்து ஒரு குறைந்த செலவு கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இது அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் "கலாம், ராஜூ ஸ்டென்ட்" என பெயரிடப்பட்டது.


2012 இல் கிராமப்புறங்களில் உள்ள சுத்த வழிமுறைக்காக இவர்கள் வடிவமைத்த டேப்லெட் கணினி "கலாம், ராஜூ டேப்லெட்" என்று பெயரிடப்பட்டது


கலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார்.


1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார்


கலாம் ஒரு தலை போட்டியில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் இந்தியக் குடியரசின் 11 ஆவது தலைவரானார். சூலை 25 ஆம் தேதியில் பதவியேற்ற பின்பு ராஷ்ட்ரபதி பவனுக்கு குடியேறினார். 


கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். தென் கொரியாவில் அவருடைய புத்தகங்கள், மொழிபெயர்ப்புப் பிரதிகளாக மாற்றுவதற்காக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.


அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுக்களாலும், இந்திய மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடல்களாலும் பெரிதும் அறியப்படுகிறார்.


அவர் 2011 ஆம் ஆண்டில் தேச இளைஞர்களுக்காக, இந்தியாவில் ஊழலை ஒழிப்பதை மையக் கருவாகக் கொண்டு, "நான் என்ன தர முடியும்" என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.


உலகத்தில் பல இடங்களுக்கு சென்ற போது கலாம் சந்தித்தவர்களில், குழந்தைகள், துறவிகள், ஞானிகள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், தொழில் துறைத் தலைவர்கள், அரசியல்  தலைவர்களிடமிருந்தும் கூட தெரிந்து கொண்ட விஷயங்கள் அவரது மனதை ஆராய்ந்து பார்க்கத் தொடங்கியது.


அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும், அதற்கு பிந்தைய காலத்தில் அகமதாபாத் மற்றும் இந்தோரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்திலும் வருகை பேராசிரியராகவும், அதிபராக இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திலும், பேராசிரியராக சென்னை அண்ணா பலகைக்கழகத்தின் விண்வெளி பொறியியல் பிரிவிற்கும், மைசூரில் உள்ள ஜெ.எஸ்.எஸ். பல்கலைகழகம் மற்றும் சோமாலியாவில் முழுவதிலும் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு சேர்ப்பு / வருகை ஆசிரியராகவும் மாணவர்களுடன் கலந்துரையாடுவதைத் தொடர்ந்து செய்து வந்தார். வளர்ச்சியடைந்த ஒரு தேசமாக மறுவடிவம் பெறுவதற்கான ஆற்றல் இந்திய தேசத்திடம் உள்ளது என்பதில் துளியும் கூட சந்தேகம் இல்லை. விண்வெளி, பாதுகாப்பு மற்றும் அணுசக்தித் துறையில் கலாம் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது இந்தக் கட்டுரை.


உலகிலேயே தலை சிறந்ததைச் சாதிக்கும் வல்லமை கொண்டவர்கள் நம் இந்தியர்கள். பிரபஞ்சத்தில் வேறு எந்த நாட்டிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டும் ஒரு தனித்தன்மை,பளிச்சிடும் நம்பிக்கை மற்றும் ஆற்றல் இணைந்த ஓர் அற்புதமான சங்கமச் சக்தி கொண்டவர்கள் இந்தியர்கள்.


வெளிப்படையாகத் தெரியாமல் மறைந்திருக்கும் அபரிமிதமான வளத்தை இயற்கை உள்ளபடியே நமக்கு வரமாக வழங்கியுள்ளது. வளங்களின் பற்றாக்குறை,


நமது பிரச்னைகளுக்குக் காரணமல்ல. அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதில், நாம் மேற்கொள்ளும் அணுகு முறைகள் தான் பிரச்னைகளைக் கிளப்பி விடுகின்றன.


விதிமுறைகளையும் கடந்து, இளைய சமுதாயம் எழுச்சி பெற்றாக வேண்டும். சிந்தனைதான் முதலீடு, முனைப்புதான் வழி முறை, கடும் உழைப்பே தீர்வு என்பதை நினைவில்கொள்ள வேண்டும். வளர்ச்சியடைந்த தேசம் என்ற நிதர்சனம் இந்திய மக்களிடத்தில் அன்றாட வாழ்க்கையில் ஓர் அங்கமாகி விட வேண்டும் என்பதுதான் அப்துல் கலாமின் கனவாகும்.


விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என்பதை தனது கருத்தாகவும் அப்துல் கலாம் சொல்லியுள்ளார்.


கைவினைப் பொருள்கள், கைவினைக் கலைஞர்கள் அதிகமாக வளர்ச்சி அடைய வேண்டும். பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை குப்பையாக்காமல் மறு உபயோக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் கலாம்.


சூலை 27, 2015 இல் இந்தியாவின், மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் (மாலை சுமார் 6.30 மணியளவில்) மயங்கி விழுந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்


வாழ்க  அவர் புகழ் 


தொகுப்பு மோகனா  செல்வராஜ்