ஆடி அமாவாசை சிறப்புகள் மற்றும் விரத முறைகள்


இறைவனை வழிபடவும், முன்னோர்களுக்கு மரியாதையும், வழிபாடும் செய்வதற்கான அற்புதமான மாதம் தான் ஆடி மாதம்.


முன்னோர்களின் ஆசீர்வாதங்களை அள்ளித்தரும் ஆடி அமாவாசை... சில வழிகாட்டுதல்கள்!

முன்னோர்களுக்குத் தர்ப்பணம், பிரார்த்தம் செய்ய மிக உகந்த நாள் அமாவாசை. அதிலும் குறிப்பாக மூன்று அமாவாசை தினங்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.


ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை (புரட்டாசி), தை அமாவாசை ஆகியவை முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க மிகவும் சிறப்பானது.


அமாவாசை தினம் அனேக மதங்களிலும் முக்கியத்துவத்தைப் பெற்றது. இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும்  சிறப்புடையது. அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது. அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.

 

அமாவாசை என்பது மிகவும் சிறந்த நாள். அமாவாசை என்பது முழுமை பெற்ற நாள். எனவே, `நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் எள்ளும் தண்ணீரும் கொடுத்த பிறகே செய்யலாம்' என்று கூறுவார்கள்.

 

இதற்குக் குறிப்பிட்ட காரணம் என்று எதுவுமில்லை. இருப்பினும் சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை என்பது எல்லோருக்கும் தெரியும். சந்திரன் தேய்பிறையிலிருந்து விடுபட்டு வளர்பிறைக்குச் செல்லும் நாள்.

ஆடி அமாவாசை :


ஆடி அமாவாசை தினத்தில் தான் நம் பிதுர்கள் பித்ரு லோகத்திலிருந்து கிளம்பி பூலோகம் வருவதாக கருதப்படுகிறது.


இப்படி ஆடி அமாவாசை, மகாளயா அமாவாசை (புரட்டாசி), தை அமாவாசை ஆகிய முக்கிய அமாவாசை தினத்தில் விரதமிருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் நம் பித்ருக்களின் ஆசி பெறலாம்.

ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுக்க சிறந்த நேரம் :


இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஜூலை 20ம் தேதி வருகிறது. ஜூலை 19ம் தேதி இரவு 12.17 மணிக்கு தொடங்கும் ஆடி அமாவாசை, ஜூலை 20ம் தேதி இரவு 11.35 மணி வரை உள்ளது.அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா். முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.

 

நாமெல்லாம் இறந்த முன்னோர்களின் இரத்த சம்பந்தமான கொடி வழியைச் சோ்ந்தவா்கள். பசியால் அமாவாசையன்று வந்த பிதுா்கள் என்னும் நம் முன்னோர்  ஆவிகள் நமக்குச் சாபம் இட்டுச் செல்லும். இப்படிப் பிதுர்கள் இட்ட சாபம் நாளாவட்டத்தில் கூடும்.

 

பின்னா் நம் குடும்பத்தை நிச்சயம் பாதிக்கும். இதனால் குடும்பத்தில் அகால மரணங்கள், மனக்கோளாறுகள், கணவன் மனைவி பிரிவு, குழந்தை இல்லாமை ஆகியவை உண்டாகும். இதனை மந்திர யந்திர தந்திர  சாதனங்களால் தீா்க்க முடியாது. அன்னதானம் செய்வதால் மட்டுமே தீா்க்கக் கூடியது.

 

வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.

அதனால் ஜூலை 20ம் தேதி காலை சூரிய உதயத்திற்குப் பின் மாலை வரை தர்ப்பணம் கொடுக்க மிக சிறப்பான நேரம்.


அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.


இந்து தர்மத்தைப் பின்பற்றும் ஒவ்வொருவருக்கும் சில கடமைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. 


சுகமாக வாழ வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள். இதற்குக் கண்டிப்பாக பித்ருக்களின் ஆசிகள் நமக்குத் தேவை.


தன் தகப்பனார், தன் தாத்தா, கொள்ளுத் தாத்தா, தன் அம்மா, தன் பாட்டி, தன் கொள்ளுப் பாட்டி, அம்மாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை, அப்பாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை என்று பன்னிரண்டு பேர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.


மேலும், யாருமில்லாத ஆதரவற்று இறந்தவர்களுக்கும் தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.


இந்தநாளில் முன்னதாக, வீட்டைச் சுத்தம் செய்தும், முன்னோரின் படங்களை சுத்தப்படுத்தியு‌ம், பூக்களால் அலங்கரித்தும், தூபம் காட்டி  அவரவர் குடும்ப வழக்கப்படி முன்னோரை வணங்க  வேண்டும்.முக்கியமாக, படையல் சாதம்  காகத்துக்கு உணவிடுங்கள்.  உங்களால் முடிந்த அளவுக்கு நான்கு பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். 


குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகள் இன்னும் இன்னும் சிறப்புடனும் செழிப்புடனும் வளர்வார்கள்.


முன்னோர்கள்ஆசீர்வாதம் நமக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும்.


மோகனா செல்வராஜ்