மாவட்ட ஆட்சியர்களுடன்-தலைமை செயலாளர் ஆலோசனை

 தற்போதைய செய்தி மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று மாலை 4.30 மணிக்கு காணொலி மூலம் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் காணொலி காட்சி மூலம் ஆலோசணை நடத்துகிறார். 


சென்னையில் கொரோனா உறுதியான 82,128 பேரில் 15,038 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பால் 1,341 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.


சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 65,748 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர். சென்னையில் 58.30% ஆண்களும், 41.70% பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.கேரள தங்கக்கடத்தல் வழக்கில் தேடப்படும் ஃபைசல் பரீத் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஃபைசலின் பாஸ்போர்ட் ரத்து குறித்து வெளியுறவு அமைச்சகம் துபாய் அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது. பாஸ்போர்ட் ரத்தானதை அடுத்து ஃபைசலிடம் துபாய் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.