ஊக்கத்தொகை-உயர்வு


 


தெலுங்கானாவில் கொரோனா பணியில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்களுக்கான ஊதியம் மற்றும் துப்புறவு ஊழியர்களின் ஊக்கத்தொகையை உயர்த்த அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிரகதி பவனில் கொரோனா பாதிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடந்தது. இதில் சுகாதாரதுறை அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதில் கொரோனாவிற்கு எதிராக போராடும் மருத்துவ பணியாளர்கள்களுக்கு ஊதியத்தை அதிகரிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.