என்ஜினியர் கமலக்கண்ணன்- கிளுகிளுப்பு சேட்டை

 யாரை எப்போ கொரோனா வந்து தூக்கிட்டு போயிடும் என்று தெரியாமல் இருக்கிறோம்.. யார் கையிலும் காசு இல்லை.. இந்த கொரோனா எப்போ போய் ஒழியும் என்றும் தெரியல.. அதுவும் சென்னைவாசிகள் நிலைமை கொடுமையோ கொடுமை.. பீதியில் இருக்கிறார்கள்.


இந்த கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.. இதனால், வீடுகள்தோறும் கணக்கு எடுக்கும் பணிகளில் கல்லூரி மாணவ, மாணிவகள் பலர் தன்னார்வலர்கள் போல் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்... இவர்களுக்கு முதலில் நாம் பாராட்டை தெரிவித்தாக வேண்டும்.


ஆனால், இவர்களிடமே கிளுகிளுப்பு வேலையில் ஈடுபடுவது எவ்வளவு அநியாயம்?


சென்னை மண்ணடி தம்புச்செட்டி தெருவில் உள்ள மாநகராட்சி ஆபீசில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருபவர் கமலக்கண்ணன்.. இவர்தான் தன்னார்வ பணியில் ஈடுபட்டு வரும் கல்லூரி மாணவி ஒருவரிடம் தனது சேட்டையை காட்டி உள்ளார். .. தனக்கு கீழ் அந்த மாணவி பணியாற்றி வந்ததால், ரூட் விட்டுள்ளார்.. அவர் பேசிய ஆடியோ இப்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


ஆனாலும் நம்ம என்ஜினியர் கமலக்கண்ணன் விடால் போன் செய்து கொண்டே இருந்துள்ளார்.


பொறுத்து பொறுத்து பார்த்த மாணவி, ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து, அவர் பேசியதை ரிக்கார்ரட் செய்துவிட்டார். பிறகு, "தனக்கு பணி பாதுகாப்பு வேண்டும், உதவி பொறியாளர் கமலக்கண்ணன் அடிக்கடி போன் செய்து காதல் தொந்தரவு கொடுக்கிறார்" என்று சொல்லி அந்த ஆடியோவுடன் சென்னை கமிஷனரிடம் புகார் தந்துள்ளார்.


இந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் மாணவிக்கு உறுதி அளித்துள்ளதா கூறப்படுகிறது.


எனினும் மாணவி விடவில்லை. தனது பாதுகாப்புக்காக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடமும் புகார் தந்துள்ளார். அதன்படி மகளிர் போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.


கொரோனா தடுப்பு பணிக்கு யாருமே முன்வராத நிலையில், இதுபோன்ற மாணவிகள் முன்வந்தால், இப்படித்தான் கேவலமாக நடத்துவதா? என்று பொதுமக்கள் கொந்தளித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


.