பஞ்சாரண்ய ஷேத்திரங்கள் (4) ஆலங்குடி பூளைவனம் குருபகவான் கோயில்

ஆலங்குடி குருபகவான் கோயில் முழு விபரம் - தல வரலாறு மற்றும் சிறப்புகள்ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் குரு பகவானுக்கான சிறப்பு வாய்ந்த திருத்தலமாக பார்க்கப்படுகின்றது. குருபெயர்ச்சி தினத்தில் குருவருள் பெற தேடி வரும் கோயிலாக ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது.


வாருங்கள் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலின் தல சிறப்புகள், வரலாறு உள்ளிட்ட முழு விபரங்களை இங்கு பார்ப்போம்...


பஞ்சாரண்ய ஷேத்திரங்கள் (4)


முல்லை வனம் (திருக்கருகாவூர்), பாதரிவனம் (அவளிவநல்லூர்), வன்னிவனம் (அரித்துவாரமங்கலம்), பூளைவனம் (ஆலங்குடி), வில்வவனம் (திருக்கொள்ளம்புதூர்) ஆகிய ஐந்தும் பஞ்சாரண்ய ஷேத்திரங்கள்.


இந்த ஐந்து வனத் தலங்களையும் ஒரே நாளில் வழிபட்டால் சிவபெருமானின் பேரருளைப் பெறலாம் என்பர்.


இங்குள்ள தலவிருட்சம் கருமை நிற பூக்கள் கொண்ட பூளைச் செடியைத் தலவிருட்சமாகக் கொண்டுள்ளது இந்த ஆலயம். விஷத்தின் தன்மையால் இந்த கருமை இருக்கலாம் என கூறப்படுகிறது.


கோயில் தகவல்கள் :மூலவர் : ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர்  • தாயார் : ஏலவார் குழலி

  • உற்சவ மூர்த்தி : தட்சிணாமூர்த்தி

  • தல விருச்சம் : பூளை எனும் செடி

  • தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், ஞான கூபம், அமிர்த புஷ்கரணி

  • புராண பெயர் : திருவிரும்பூளை, இரும்பூளை

  • இடம் : ஆலங்குடி, திருவாரூர்திருவிழாக்கள் :


சுயம்பு லிங்கமாக தோன்றிய இவர் குருவின் அம்சமாக பார்க்கப்படுகிறது. குரு பெயர்ச்சி, தை பூசம், பங்குனி உத்திரத்தின் போது தட்சிணாமூர்த்திக்கு தேர் திருவிழா, சித்திரை பௌர்ணமி விழா ஆகியவை கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.

தல சிறப்புகள் :
இங்குள்ள மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கின்றார். அம்பிகை இந்த தலத்தில் தவம் இருந்து இறைவனைத் திருமணம் செய்துகொண்டார்.
விஸ்வாமித்திரர், முகுந்தர், வீரபத்திரர் வழிபட்ட புண்ணிய தலமாகும்.
இந்த திருக்கோயில் குறித்து சிவனின் தேவாரப்பாடல் பாடப்பெற்றுள்ளது.
இங்குள்ள சுந்தரர் சிலையில் அம்மை தழும்புகள் இருப்பதை காணலாம்.
இந்த திருத்தலம் சோழர்களால் கட்டப்பட்டது.


 

சிறப்பு வழிபாடு:
நாக தோஷம் நீங்க, மனக் குழப்பம், பயம் நீங்குவதற்கு இங்குள்ள விநாயகரையும், திருமணம் தடை, கல்வியில் சிறக்க இந்த ஆலயத்தில் பிரார்த்தித்து வழிபடலாம்.


இந்த கோயிலில் உள்ள குருபகவானுக்கு மாசி மாதம் வரும் வியாழக்கிழமைகளில் மட்டும் தான் அபிஷேகம் நடத்தப்படுகின்றது.

குரு பெயர்ச்சி தினத்தை விட இந்த மாசி மாத வியாழக்கிழை வழிபாடு மிகவும் விஷேசமாக இந்த திருத்தலத்தில் கொண்டாடப்படுகின்றது.

தட்சிணாமூர்த்தி ஆலகால விஷத்தை குடித்து தேவர்களை காத்ததால் இதற்கு ஆலங்குடி என பெயர் வந்தது. இங்கு ஆலமரத்திற்குக் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்கிறார்.தட்சன் சிலை:
பார்வதி தேவியின் தந்தையான தட்சன், சாபம் நீங்கி ஆட்டுத் தலையுடன் காட்சி அளிக்கின்றார். இவர் உற்சவர் சிலைகள் இருக்கும் இடத்தில் காட்சி அளிக்கின்றார்.

அம்மையுடன் சுந்தர் சிலை :


இங்குள்ள சுந்தரர் சிலை திருவாரூரிலிருந்து அர்ச்சகர்களால் ஒளித்து எடுத்துவரப்பட்டதாகவும், அப்போது காவலர்களிடமிருந்து தப்பிக்க, தங்களின் பிள்ளைக்கு அம்மை நோய் உள்ளதால் மறைத்து கொண்டு செல்கிறோம் என கூறினர்.

தொடர்ந்து ஆலங்குடி வந்து பார்த்த போது சுந்தரருக்கு அம்மை போடப்பட்டிருந்தது. இப்போதும் கூட சுந்தரர் சிலைக்கு அம்மை தழும்புகள் இருப்பதைக் காணலாம்.


 


மாதா, பிதா, குரு :
மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள், அந்த வகையில் இந்த கோயிலில் நுழைந்ததும் அம்மன் சன்னதி, பின்னர் சுவாமி சன்னதி, பின்னர் குருவின் சன்னதி அமையப்பெற்றுள்ளது.

 

நேர்த்திக் கடன்:


வேண்டுதல் நிறைவேறியவர்கள் இங்கு வந்து அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி வழிபடுவது வழக்கம்.


தல பெருமைகள்:
இந்த திருக்கோயில் குரு பகவானின் சிறப்பு தலமாகப் பார்க்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை மகாகுரு வாரமாக கொண்டாடப்படுகின்றது.


கோயில் திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை

கோயில் முகவரி:
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்,
திருவாரூரிலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஆலங்குடிக்கு செல்லும் பேருந்து வசதிகள் உண்டு.


ரயில் நிலையம்: கும்பகோணம் ரயில் நிலையம் இந்த தலத்திற்கு அருகில் உள்ளது


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


நன்றி. 


ஓம் சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்
அன்பே சிவம்...சிவமே அன்பு....


திருச்சிற்றம்பலம்


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்