கந்த சஷ்டி கவசம் விவகாரம் : கறுப்பர் கூட்டம் சேனலை நிரந்தரமாக முடக்க கோரி


 கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை நிரந்தரமாக முடக்கக் கோரி யூடியூப் நிறுவனத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட நிகழ்ச்சி தொகுப்பாளரான சுரேந்திரன் புதுச்சேரி மாநிலம் அரியங்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.


தகவலறிந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அங்கு சென்று, சுரேந்திரனை சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இந்நிலையில், ராயபுரத்தில் உள்ள எழும்பூர் மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை இல்லத்தில் சுரேந்திரன் ஆஜர்படுத்தப்பட்டார்.


கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை முழுவதுமாக முடக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கறுப்பர் சேனலை முடக்க கோரி யூடியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


மேலும், இந்த சேனலின் பின்னணி மற்றும் நிதி உதவி செய்வோர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.