இன்றைய ராசிபலன் 22/07/2020

 



மேஷம்: குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தந்தையின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் உள்ள கடன்களை வசூலிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறும். பணியாளர்களுக்கு அலைச்சல் குறையும். புது வேலை கிடைக்கும்.


ரிஷபம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தைரியம் தரும் நாள்.


மிதுனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அரைகுறையான வேலைகள் உடனே முடியும். தோற்ற பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.


கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள்.அலுவலகத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். வியாபாரிகளுக்கு வெற்றி தேடி வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவசரத் தேவைக்குச் சேமிப்பு பணத்தை பயன்படுத்துவீர்கள். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர்.


சிம்மம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. லேசாக தலை வலிக்கும்.வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


கன்னி : உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.திட்டமிட்ட முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பீர்கள். பெண்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறுவதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும்.


துலாம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்   கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


விருச்சிகம்: கடந்த நாட்களில் இருந்த மனஉளைச்சல் நீங்கி ஒரு தெளிவு பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்குவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சகஊழியர்களால் சில ஆதாயம் அடைவீர்கள்.


தனுசு:  தன்னம்பிக்கை தரும் விதத்தில் பேசி அனைவரையும் கவருவீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.


மகரம்: குடும்பத்தின் நிம்மதி சற்றுக் குறையலாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். சரியான தருணத்தில் உதவும் நண்பர்களை எண்ணி பெருமிதம் கொள்வீர்கள்.


கும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். அமோகமான நாள்.


மீனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.மனதில் பாதுகாப்பின்மை உணர்வு மேலோங்கி இருக்கும்.


மோகனா  செல்வராஜ்