இன்றைய ராசிபலன் 16/07/2020


மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். தோற்ற பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.


ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்துக் கொண்டு குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். திட்டமிட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புதிய வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்து லாபத்தை ஈட்டுவீர்கள்.


மிதுனம்:  கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது .ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் குறையும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


கடகம்: உங்களின் மனஉளைச்சலை நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு எதிர்பார்த்த அளவில் இருக்காது. உத்யோகஸ்தர்களுக்கு அலைச்சல் சற்று அதிகரிக்கும். பெண்களுக்கு பேச்சில் நிதானம் தேவை. தாயின் அன்பு, ஆசியை பெறுவீர்கள்.உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.


சிம்மம்:  எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பொறுப்பாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


கன்னி: நீண்ட நாள் கவலைகள் தீர ஆரம்பிக்கும். வியாபாரத்தில் துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புதிய வருமானத்தால் உங்களின் அந்தஸ்து உயரும். சுபநிகழ்ச்சிகளால் செலவுகள் கூடும்.


துலாம்: சந்திராஷ்டமம் இருப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர்கள் நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.


விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.


தனுசு: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். அமோகமான நாள்.


மகரம்: மனதில் தைரியம் கூடும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். சுபநிகழ்ச்சி தொடர்பான விஷயங்களில் தாமதம் ஏற்படலாம். உத்யோகஸ்தர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போது கவனம் தேவை.


கும்பம்: எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். புது வேலை முயற்சி பலிதமாகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய் வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.


மீனம்: கருத்து வேறுபாடுகளால் விலகிய நண்பர்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் உள்ள கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்பு கூடும். பெண்கள் பணத்தின் அருமையை உணர்ந்து சேமிப்பை அதிகப்படுத்துவர்.


மோகனா  செல்வராஜ்