விலை உயர்ந்த முகக் கவசம்


கடலூர் மீன் சந்தையில் மக்கள் கூட்டம் அலைபோதுகிறது. சமூக இடைவெளி இன்றியும், முக கவசம் அணியாமலும் மக்கள் அதிகளவில் கூடுவதால் கொரோனா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் காலையிலிருந்தே மீன் வாங்குவதற்காக சிறு, சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகளவில் கூடுகின்றனர்.


கொரோனா தொற்று என்பது கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 1,201 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.புதுச்சேரியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி இறுதி ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்டவர்களும், 100க்கும் மேற்பட்ட வாகனங்களும் அணிவகுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


புதுச்சேரி மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் இறப்பு நிகழ்வில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று அரசு உத்தரவு உள்ளது. இதையும் மீறி 500க்கும் மேற்பட்டவர்கள் முரளியின் அடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர காவல் ஆய்வாளர் உட்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


செய்யாறு காவல் நிலையத்தில் ஏற்கனவே, காவலர் ஒருவர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கடந்த 3 நாட்களாக காவல் நிலையம் மூடப்பட்டன


 உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசிடம் இருந்து தப்பிக்க முகக்கவசம் அணிதல் இன்றியமையாத ஒன்றாக கருதப்படுகிறது.


மகாராஷ்டிராவில் ஒருவர், கொரோனாவில் இருந்து தன்னை பாதுகாக்க, உலகின் முதல் விலை உயர்ந்த முகக் கவசம் செய்து அணிந்துள்ளார்.


கொரோனாவை தடுக்க அத்தியாவசியமான ஒன்றான மாஸ்க், பல்வேறு வடிவங்கள் மற்றும் பல்வேறு தரங்களில் கிடைக்கின்றன.


சிலர் கைக்குட்டை, துப்பட்டா, டவல், முந்தானை என தங்களிடம் இருப்பதையே மாஸ்க்காக பயன்படுத்துவதை காண முடிகிறது.


இந்நிலையில் புனேவைச் சேர்ந்த சங்கர் குராடே என்பவர் ரூ. 2.89 லட்சம் மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.


 லடாக்கில் இருக்கும் நிம்மு ராணுவ முகாமிற்கு பிரதமர் மோடி சென்று இந்திய வீரர்களுடன் உரையாடினார்.


வீரர்கள் முன் பேசிய பிரதமர் மோடி தமிழில் திருக்குறள் ஒன்றை குறிப்பிட்டார்.அதில்,


மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்


எனநான்கே ஏமம் படைக்கு


என்ற குறளை பிரதமர் மோடி குறிப்பிட்டார்.


இந்த குறளின் விளக்கம்  'வீரம், மானம், முன்னோர் சென்ற வழியை பின்பற்றி செல்லுதல், தலைவனின் நம்பிக்கையைப் பெற்று நடப்பது ஆகியவை ஒரு படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும் என்பதாகும்.


பிரதமர் மோடி எல்லையில் திருக்குறள் கூறியது குறித்து கவிஞர் வைரமுத்து டிவிட் செய்துள்ளார். அதில்,

படைவீரர்களுக்கான உரையில்  படைமாட்சி என்ற அதிகாரத்திலிருந்து
திருக்குறளை மேற்கோள் காட்டிய  பிரதமர் மோடிக்கு எங்கள் நன்றி.

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு’


என்ற இன்னொரு குறளையும்
அவர் இதயத்தின் ஓரத்தில் எழுதிவைக்கிறோம்.

இதன் விளக்கம் என்னவென்றால்,மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது ஒரு நல்ல நாடு., என்பதாகும்.