குறுஞ் செய்திகள் - சென்னையில் கொரோனா உயிரிழப்பு


இந்தியாவில் கொரோனா தொற்று  பாதிப்பு எண்ணிக்கை 4,56,183லிருந்து 4,73,105 ஆக அதிகரிப்பு   குணமடைந்தோர்  2,58,685லிருந்து 2,71,697 ஆக உயர்வு


உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,476லிருந்து 14,894 ஆக அதிகரிப்பு


கொரோனாவால் பாதித்த 1,86,514 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை


தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு ரயில்பெட்டிகளை பயன்படுத்தும் தேவை ஏற்படவில்லை -அமைச்சர் பாண்டியராஜன்


 சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 19 பேர் உயிரிழப்பு என தகவல் 


* ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 6, ஓமந்தூரார் மருத்துவமனையில் 7 பேர் பலி   * கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 4, தனியார் மருத்துவமனையில் 2 பேர் கொரோனாவால் உயிரிழப்புசென்னை சிஐடி காலனியில் உள்ள கனிமொழி எம்பி வீட்டிற்கான போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது


* கொரோனா தடுப்பு பணிக்கு போலீசார் தேவை என்பதாலும், கனிமொழிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதாலும் பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்டதாக போலீஸ் விளக்கம்


சென்னை சிஐடி காலனியில் உள்ள திமுக எம்.பி. கனிமொழி வீட்டிற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது -- ஏ.கே.விஸ்வநாதன், காவல் ஆணையர்ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வந்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது - திமுக தலைவர் ஸ்டாலின்


கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி அவசரச் சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை முடிவு எடுத்திருப்பது ஜனநாயக விரோதம் - ஸ்டாலின்ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வாடகை வாகன உரிமையாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்கக் கோரிய வழக்கு


மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


___________________


மத்திய பாஜக அரசின் சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல கொரோனா தடையாக இருக்கிறது  - நிர்மலா சீதாராமன், நிதியமைச்சர்


__________________


ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்படுமா என்பது பற்றி அறிக்கை தர அரசுக்கு அவகாசம்


* ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய அனைத்து வழக்குகளை ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்


_______________________


இந்திய வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் சீன வீரர்கள் உயிரிழந்ததை முதன்முறையாக ஒப்புக் கொண்டது சீனா