களையிழந்த நாய் இறைச்சி திருவிழா

 உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் வூஹான் சந்தையில் இருந்து பரவியுள்ளதாக கூறப்படுகிறது.


நம் ஊரில் கோழிக்கறி, ஆட்டுக்கறி பிரபலம் என்பது போல் சீனாவில் நாய்க்கறிக்கு ஏகப்பட்ட வரவேற்பு.


சீனாவில் உள்ள யூலின் நகரத்தில் 10 நாட்கள் நடைபெறும் நாய் இறைச்சி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வது வழக்கம். 


வனவிலங்கு வர்த்தகத்தை தடை செய்வதற்கும், செல்லப்பிராணிகளை பாதுகாப்பதற்கும் சீன அரசு புதிய சட்டங்களை உருவாக்கி வருகிறது.


இதுவாகத்தான் இருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 


நாய்களை கால்நடைகளாக இல்லாமல் செல்லப்பிராணிகளாக வகைப்படுத்த யூலின் விவசாய அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. 


ஆனால் நாய்க்கறி சாப்பிடுவதற்கு தடை விதிப்பது மக்களுக்கு முதலில் சிரமமாக இருக்கும் என்று விலங்குநல ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.


அதனால் நாய் இறைச்சி திருவிழா நடைபெறும் கடைசி ஆண்டு இதுவாகத்தான் இருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்