உலகம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம்


 


உலகம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம்     (World Day to Combat Desertification and Draught)


மனிதனாலும், சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும் வறட்சி ஏற்பட்டு, நிலங்கள் பாலைவனமாக மாறுகிறது. மேலும் பூமியின் நிலப்பரப்பு படிப்படியாக பாதித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர்.


சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுப்பதன்மூலம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஏற்படுவதைத் தடுக்க முடியும். இதனை உணர்ந்த ஐ.நா. சபை 1994ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.


ஜனவரி 30 ஆம் நாள் 1995 ஆம் ஆண்டு முதல், உலக பாலைவன மற்றும் வறட்சி ஒழிப்புத் தினத்தை ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தி, இன்றளவிலும் பின்பற்றி வருகிறது. அந்தத் தினம் இன்று ஜூன், 17 ஆம் நாள் உலக அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. 


அன்று முதல் இன்று வரை ஐக்கிய நாடுகளின் பாலைவனமாவதற்கு எதிரான மகாநாட்டுக் குழுக்களும் (parties) அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் இது பற்றி விழிப்புணர்வுடன் செயற்படுபவர்களும் இத்தினத்தை உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.


இத்தினத்தில் 11வது வருடாந்தக் கொண்டாட்டம் கொண்டாடப்பட்ட போது வறுமை ஒழிப்பு, பொருளாதார உதவி மற்றும் இந்த நூற்றாண்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைதல் என்பன பற்றி முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.


வறட்சி நிலத்தில் நிலச் சிதைவுகள் ஏற்படும் பிரச்சினையைப்பற்றி சர்வதேசரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சட்டரீதியான பொறுப்பு மேற்கூறிய மகாநாடு மாத்திரமேயாகும்.


உலகளாவிய ரீதியில் பாலைநிலங்களை நோக்கும் போது இத்தன்மையினை பொதுவாக அவதானிக்கலாம். பாலைவனமாவதற்கும், வறட்சிக்கும் எதிரான இத்தினத்தின் போது, பாலைவனமாவதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கான மனநிலையைத் தூண்டுவதற்கானதும் உணர்வூட்டுவதற்கானது

உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற பிரச்னைகளில் பூமி வெப்பமடைதல் மிக முக்கியமானதாகும். பூமியைச் சுற்றியுள்ள 8 கி.மீ. தொலைவுக்கு கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ûஸடு மற்றும் குளோரோ புளோரா கார்பன் போன்ற வாயுக்களின் அடர்த்தி அதிகமாவதால் வாயு மண்டலம் சூடாகியுள்ளது. இவ்வாயுக்களை பசுமைக் கூடார வாயுக்கள் என்று அழைக்கின்றனர்.


இவ்வாயுக்கள் வாயுமண்டலத்தில் நிலைகொண்டு சூரியனின் ஒளிக் கதிர்களை உள்வாங்கி வெப்பமடைந்து வாயுமண்டலத்தை சூடாக்குகிறது. இவ்வாறு பூமி வெப்பமடைவதை பசுமைக் கூடார விளைவு என்று அழைக்கிறோம்.


இதனால் எதிர்காலத்தில் பூமியின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கலாம், மழை குறைந்து குடிநீர்ப் பற்றாக்குறை மற்றும் பஞ்சம் பட்டினி ஏற்படலாம். பல நோய்கள் உருவாகலாம். மக்கள்தொகை அதிகரிப்பு, காடுகளை அழித்தல், அதிக அளவில் வாகனங்கள், பெட்ரோலியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துதல், குளிர்சாதன உபகரணங்களைப் பயன்படுத்துதல், வளர்ந்த நாடுகளில் தேவைக்கு அதிகமாக தனிநபர் மின் உபயோகம் மற்றும் வரைமுறை இல்லாத இயற்கை வளங்களை ஆடம்பர வாழ்க்கைக்குப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் பசுமைக் கூடார வாயுக்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன.


பூமியின் வெப்ப அதிகரிப்புக்கு பசுமைக் கூடார வாயுக்களே காரணம். இவ்வாயுக்களின் மூலக்கூறுகள் சூரிய ஒளியின் நீள அலைவரிசை ஒளிக்கற்றைகளை ஈர்த்து தன்னகத்தே உள்வாங்கி வெப்பத்தை நீண்ட நேரம் தேக்கி வைப்பதால் வாயுமண்டலம் வெப்பமாகிறது. கரியமில வாயு பூமியை வெப்பமாக்குவதில் அதிகப் பங்கு வகிக்கிறது. வாயுமண்டலத்தில் கரியமில வாயு இதே அளவில் உயருமானால் 2100ம் ஆண்டில் 540- 970 பிபிஎம் ஆக உயர வாய்ப்புள்ளது. 


கரியமில வாயுக்களின் துகள்கள் சூரிய ஒளியின் வெப்பத்தை உட்கொண்டு நீண்ட நேரம் தன்னகத்தே வைத்துக்கொள்ளும் தன்மையுடையது. காற்று மண்டலத்தில் இதன் ஆயுள்காலம், சுமார் 50-2000 ஆண்டுகளாகும். இது எளிதில் வெப்பத்தைக் கடத்தாது. எனவே, இவ்வாயுவின் அளவு அதிகரிக்க அதிகரிக்க வெப்பம் உயர்ந்து கொண்டே இருக்கும்.


''நம் மாநிலம் மழை மறைவுப் பிரதேசம் என்பதால், அதிக நீர் ஆதாரங்களாக இருப்பவை தென் மேற்குப் பருவமழை மற்றும் வட கிழக்குப் பருவமழை மட்டுமே. இன்றைய காலகட்டத்தில், இயற்கைக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளால் பருவமழை பொய்த்துவிட்டது. இதனால் அனைத்துத் தேவைகளுக்கும் நிலத்தடிநீரையே நாடவேண்டியுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. மேலும், நம் மாநிலத்தில் ஆறுகளும், ஏரிகளும் சங்கிலித் தொடர்போன்று இணைந்திருப்பதால், இடையே ஏரிகளில் காணப்படும் ஆக்கிரமிப்புகளும், மழை நீரை முறையாகச் சேமிக்காததுமே வறட்சிக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன.


பல்வேறு கல்வி அமைப்புகளும், அரசு சாரா நிறுவனங்களும் இயற்கையைப் பாதுகாக்க வேண்டி மக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் வருடந்தோறும் இந்தத் தினத்தைக் கொண்டாடி வருகின்றன.


உலக வறட்சி ஒழிப்பு நாளான இன்று வறட்சிக்கு எதிரான செயல்பாடுகள் களையப்பட்டு, இயற்கையைக் காக்க விழிப்பு உணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.



மோகனா செல்வராஜ்