சுவை மிகுந்த இனிப்பு பூந்தி


சுவை மிகுந்த இனிப்பு பூந்தி


தேவையான பொருட்கள்:
 
கடலை மாவு - 1/4 கிலோ
நெய் - சிறிதளவு 
கேசரி பவுடர் - சிறிதளவு
சர்க்கரை - 1/2 கிலோ
நெய்/ ஆயில் - தேவையான அளவு


செய்முறை:
 
சர்க்கரையை ஒரு அங்கலமான பாத்திரத்தில் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ளவும்.


கடலைமாவை தண்ணீர் சேர்த்து கேசரி பவுடர் சிறிது சேர்த்துக் கொள்ளவும். தோசை மாவு போல் கரைத்துக்கொள்ளவும்.
 
வாணலியில்  நெய்யை காயவைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி தேய்த்து எண்ணெய்யில் போடவும். எண்ணெயில் விழுந்த மாவை அதிகம் சிவக்காமல் வெந்ததும் எடுத்து சர்க்கரைப் பாகில் போட்டு சிறிது நேரத்தில் எடுத்து ஒரு  தட்டில்  போடவும்.


சுவையான பூந்தி தயார்.


மோகனா  செல்வராஜ்