செய்திகள் =இ-பாஸ் இல்லாமல் அனுமதி இல்லை:

 
தமிழகத்திற்குள் அனுமதி இல்லை:


இ-பாஸ் இல்லாமல் கர்நாடகாவிலிருந்து நடந்து வருவோர் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 


வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் அருகே இயங்கும் மருந்து நிறுவனத்தால் நீர் நிலைகளில் மாசு ஏற்படுகிறதா? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 


தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர், காவலர்கள் உட்பட 27 பேரை நியமித்து எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.  


தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்றும், இந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


:


மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மணிப்பூரில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஜூலை 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


 


சீன நிறுவனங்களுடன் செய்யப்பட்ட ரூ.2,900 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பீகார் மாநில அரசு ரத்து செய்து அறிவித்துள்ளது.


:


மாதத்திற்கு 50 லட்சம் தனிநபர் பாதுகாப்பு கவசங்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


 


டெல்லியில் முதன்முறையாக பிளாஸ்மா வங்கியை உருவாக்க உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். :


 விளையாட்டுச் செய்திகள்வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முடிவு:


இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டீடயஉம டுiஎநள ஆயவவநச லோகோ அணிந்து விளையாட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முடிவு செய்துள்ளனர்.