கொரோனா தடுப்பு நடவடிக்கை - பிரதமர் மோடி கவலை-


 


ஊரடங்கு  தொடர்பாக 6வது முறையாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரை  சிறிய அளவிலான அலட்சியம் கூட உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் - பிரதமர் மோடி


* கொரோனா தடுப்பு நடவடிக்கை, பொருளாதார மேம்பாடு குறித்து பேச்சு


மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படக் கூடும்


நாள்தோறும் பல முறை 20 விநாடிகளுக்கு கைகழுவும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி


* நாடு முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை  இரண்டாம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு


பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை - பிரதமர் மோடி கவலை


இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது


சரியான நேரத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன


சிறிய அளவிலான அலட்சியம் கூட உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்


அரசு அதிகாரிகள், மக்கள் தற்போது மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்


ஊரடங்கு விதிகளை மீறி செயல்படுபவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டியது முக்கியம்


ஊரடங்கு விதிகள் விவகாரத்தில் சட்டத்திற்கு மேலாக எந்த ஒரு நபரும் இல்லை


சிறிய தவறுக்கு கூட இடங்கொடுக்க கூடாது


பிற உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் நிலைமை சீராகவே உள்ளது


 சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் நிலைமை சீராக உள்ளது - பிரதமர் மோடி


ஏழைகளின் வங்கிக்கணக்கில் ரூ.31ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது


அமெரிக்க மக்கள் தொகையை ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு மக்கள் இந்தியாவில் பலன் அடைந்துள்ளனர்  - பிரதமர் மோடி


ஊரடங்கு சமயத்தில் உணவு இல்லாமல் பசியால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை


விவசாயிகளுக்கு சுமார் 18ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன


நவம்பர் மாதம் வரை இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படும்  - பிரதமர் மோடி


நவம்பர் வரை 80 கோடி மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் - பிரதமர் மோடி


உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் ஊக்கப்படுத்த முன்வர வேண்டும்


விவசாயிகள் மற்றும் வரி செலுத்துபவர்கள் கொரோனா ஊரடங்கு சமயத்தில் நாட்டிற்கு பேருதவி செய்துள்ளனர்