இன்றைய ராசிபலன் 30/06/2020


மேஷம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.


ரிஷபம்:  இன்று எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனதில் எதைபற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். மாணவர்களுக்கு  கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும்.


மிதுனம்: பணியாளர்கள் திட்டமிட்ட இலக்குகளை அடைய கடுமையாக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் லாபம் கூடும். சிறிய ஆசைகளுக்கு இடம் கொடுத்து பிரச்னையில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.


கடகம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணப்பற்றாக் குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில்  மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.


சிம்மம்:இன்று நீண்டதூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. அரசால் ஆதாயம் உண்டு.


கன்னி: தொழிலில் இதுவரை இருந்த வந்த சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்கு உபரி வருமானம் வரும். வியாபாரத்தில் முன்னேற அதிகமாக உழைப்பீர்கள். சகோதர,சகோதரியின் பொருளாதார பிரச்னைகளை சரிசெய்வீர்கள்.


துலாம்:  இன்று பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. வழக்குகளில் மெத்தன போக்கு காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மனதில் ஒருவித கவலை இருக்கும்.


விருச்சிகம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனம் தொந்தரவு தரும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் விவாதம் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


தனுசு: குடும்பத்தில் எதிர்பார்த்த சுபநிகழ்ச்சிகள் நடக்கும். தந்தைவழி உறவினர்கள் தரும் ஆதரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளரும். வியாபாரிகளுக்குப் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும்.


மகரம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில்  சக ஊழியர்கள் மதிப்பார்கள். அந்தஸ்து உயரும்நாள்.


கும்பம் : இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில்  சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.


மீனம்: எதிர்கால வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். பெண்கள் வரவுக்கு மீறிய செலவுகள் செய்ய வேண்டாம். அலுவலகத்தில் யாரையும் விளையாட்டுக்குக்கூட கேலி செய்து பேசாதீர்கள். நண்பர்களிடம் கடந்த கால நினைவுகளை கூறி மகிழ்ச்சி கொள்வீர்கள்.


மோகனா  செல்வராஜ்