உலக விதவைகள் தினம் (23.06.2020) ஒரு பார்வை

 விதவைகளுக்கு என்று ஒரு தினம் கொண்டாடப்படுகிறதா? அல்லது கடைபிடிக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு கடைப்பிடிக்கத்தான் முடியும்


”விதவைகள் தினத்தை” கொண்டாட முடியாது என்பது தான் மறுக்க  முடியாத  உண்மை நிலை. 


உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விதவைப் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா. சபை விவாதித்து ஜூன் 23 ஐ சர்வதேச விதவைகள் தினமாக 2010ஆம் ஆண்டில் அறிவித்தது.


உலகம் முழுவதும் கணவன்மார்களை இழந்து, ஆதாரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இத்தினம் கடைப்பிடிக்கபடுகிறது.


இத்தகைய விதவைத் தன்மையின் விழிப்புணர்வை உலக மக்களிடம் ஏற்படுத்தவே ’உலக விதவைகள் தினம்’ ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 23ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது


’விதவைத் தன்மை’ ஒவ்வொரு பெண்ணையும் வறுமையில் தள்ளி, அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை மறுத்து, அவர்களது வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்குகிறது.


தற்போது உலகம் முழுவதும் சுமார் 300 மில்லியன் விதவை பெண்கள் இருக்கின்றனர், அவர்களில் 200 மில்லியன் பெண்கள் கணவனை இழந்து வறுமையில் வாடுகின்றனர், 100 மில்லியன் விதவை பெண்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.


விதவைப் பெண்கள் நிலை மாற


அந்த  காலத்தில்  மொட்டை அடித்தும்  பெண்களை வன்முறை கொடுமைக்கு ஆளாக்கினார்கள். இந்த  நிலை  தற்போது மாறித்தான் இருந்தாலும்  சில பழக்க வழக்கங்கள்  மாறவில்லை


தற்போது  அனைத்து  பெண்களும்  கல்வியில்  தேர்ச்சி  பெற்று  உயர்  பதவி வகித்து  வருகிறார்கள்.


சில கைம்பெண் பெண்மணிகள்  பொருளாதார ரீதியில்  வலிமையாக இல்லை என்றாலும், அவர்கள் மன ரீதியாக வலிமையானவர்களாக இருக்கிறார்கள்.


தற்கொலை செய்துக் கொள்வது,  குடும்ப பெண்களை விட கைம்பெண்கள் குறைவு.


’சிறுபான்மை’ எனும் வட்டத்தில் கூட, சிறிய இடத்தை பெற்றிருக்கும், கணவனை இழந்த பெண்களின் நிலை மாற, அந்தக் குறிப்பிட்ட சமூகத்தில் ஆண்-பெண் சமத்துவம் பற்றியான நடைமுறை அறிவு மேம்பட வேண்டும்.


இவை அனைத்தும் ஒரு பக்கம் இருக்க, பல கைம்பெண்கள் இன்றும் கூட சமூகத்தின் பிடியைத் தகர்தெறிந்து தைரியமான பெண்களாக உலா வருகின்றனர்.


கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கும்,  கணவனை பிரிந்த  ஒரு பெண்ணுக்கும் ஒரு,நூலிழை  வேறுபாடு உள்ளது. இரண்டுமே ஒன்று தான்.


இருவருக்குமே  சமுதாயத்தில்  மதிப்பு இல்லை என்பது  மறுக்கப்படாத உண்மை.  ஏற்றுக்கொள்ளத்தான்  வேண்டும்


நமது தமி ழ்  நாட்டில்  விதவை என்ற சொல் நீக்கி  கைம்பெண்  என்ற 
புதிய  சொல்  உருவாக்கியதன்  மூலம்  பொட்டு   வைத்துக்கொள்ளலாம் என்ற  திராவிட தத்துவம் .


திராவிட இயக்க தலைவர்கள் பெண்ணுரிமைக்காக குரல்  பலர்  கொடுத்திருந்தாலும் அவர்களுக்கான உரிமைகள் நிலைநாட்டுவதில் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் கலைஞர் கருணாநிதியின் பங்கு அளப்பரியது.


             கண்ணுக்குள் பாவை போல உருண்டிருக்கும் உள்ளம் - கைம்                             பெண்ணின் இருப்பதையும் உணர்ந்திடுவாய்" 


என்று அவர்களின் வலியை  கலைஞர் உணர்த்தினார். அதோடு வாழ்வின் விளிம்பு நிலையில் இருக்கும் அவர்களை விதவை என்ற சொல்லால் அழைக்கும்போது அந்த சொல்லில் கூட பொட்டு இல்லை என கருதி அந்த சொல்லுக்கு மாற்றாக இரு திலகங்கள் வரும் வகையில் கைம்பெண் என்று மாற்றி  அழைக்கத் தொடங்கினார்.


அனைத்து  பெண்ணிற்கும் சம உரிமை உண்டு என்பதை உணர்த்திய அவர், பெண்களின் மறுமணத்திற்கு பெரிதும் கலைஞர் ஆதரவளித்தார்


 நம்மை சுற்றி  நமது   பாட்டி,  தாய்,  மாமியார், சகோதரி,   அனைத்து  உறவுகளில்  ஏதாவது  ஒரு பெண்மணி  தன் கணவனை  இழந்து  வாழ்ந்து கொண்டு  இருப்பார்கள்.


மாமியார்  கணவனை  இழந்தால்  மருமகள் அவர்களை  ஒரு அலட்சியம் மற்றும் சரி வர நடத்துவது இல்லை


ஆனால் தனது தாய்,  தந்தையரை  இழந்து  இருந்தால்  அவர்களை  ஒரு   நல்ல விதமாக  நடத்துவார்கள், இதை  ஒப்புக்கொள்ளத்தான்  வேண்டும்.


                             "பெண்ணுக்கு  பெண்ணே  எதிரி "


நம்முடைய  வீட்டு  பெண்களை  நாம் சரிவர  நடத்தினால்,  நம்மை சுற்றியுள்ள  சமுதாயம்  அவர்களை  சரிவர  நடத்தும் .


ஆகையால்   நாம் அனைவரும்  நமது  குடும்ப கைம்பெண் சகோதரிகளை சரிவர  நடத்த வேண்டும் என்று   இக்கட்டுரையின் நோக்கம்.  


நாம் அனைவரும்  நமது  குடும்ப கைம்பெண் சகோதரிகளை அன்போடு    நடத்த வேண்டும் என்று   உங்களை அன்போடு கேட்டு கொள்கிறேன்


மோகனா செல்வராஜ்


இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும்